26 Dec 2018

மழை ரகசியம்


மழை ரகசியம்
எப்போதோ வந்த அந்த மழையிடம்
ஒரு தேநீர்க் கேட்டு
அது கோபித்துக் கொண்டு போன
ரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்
குடையோடு வந்த பலர் சபிக்கக் கூடும்
மழையில் நனைத்து தூய்மையாகட்டும் என்று
புழுதி நிறஞ் சூழ ஓட்டிக் கொண்டிருக்கும்
வாகன ஓட்டிகள் திட்டக் கூடும்
தாள் கிழிக்காமல் கிழியாத நோட்டோடு
கத்திக் கப்பலின் கனவில் சென்று கொண்டிருக்கும்
சிறுமிகள் செல்லமாய்ச் சிணுங்கக் கூடும்
மிகவும் வற்புறுத்திக் கேட்டால் மட்டும் சொல்லுங்கள்
மழைக்குச் சர்க்கரை வியாதி என்று
மீண்டும் வற்புறுத்திக் கேட்டால்
சர்க்கரையற்ற தேநீர் மழைக்குப் பிடிக்காது என்று சொல்லுங்கள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...