எல்லாத்துக்கும் போராடணும்னா அலுப்பா இருக்குப்பா. கஜா புயலுக்குப்
பின்னாடி நிவாரணப் பொருட்கள் எல்லாம் வந்து ஏழெட்டு நாளா பள்ளிக்கூடத்துல பூட்டிக்
கிடக்கு. அதை வாங்கணும்னா சாலை மறியல் பண்ணணும்ங்றாங்கப்பு.
ஒரு டவுட்தான், இந்த வேகத்துல நிவாரணம் வழங்குனா, அவங்க வழங்கி
முடிக்கிறதுக்குள்ள அடுத்து புயலே வந்திடும் போலிருக்கே என்று ஒரு பெரிசு கேட்கும்
போது, புயலா அது எப்போ வந்துச்சு, மறந்துடுச்சே என்று இளசுகள் கமெண்ட் அடிச்சிகிட்டு
இருக்குங்கப்பு.
ஊருக்குள்ள கரண்ட்டைக் கொண்டாரத்துக்குள்ள வீட்டுக்கு இருநூறு,
முந்நூறுன்னு வாங்கிப்புட்டாங்கப்பு. வயல் எல்லாம் காய்ஞ்சுக் கிடக்கப்பு, சீக்கிரம்
பார்த்து கரண்டைக் கொடுங்க, இல்ல மேட்டூரைத் திறக்க எதாச்சும் செய்யுங்கப்புன்னா மழை
வரும் பார்துக்கோ... போ... போய்கிட்டே இருங்கன்னு சொல்றாங்கப்பு.
கஜா புயலே பரவாயில்லைன்னு தோணுதப்பு. நாலு மணி நேரம்தான் அடிச்சுது.
புயல் பேரைச் சொல்லி இவனுங்க அடிக்கிறது இருக்கே... சாம்பிளுக்கு ஒண்ணு என்னான்னா...
வர்ற நல்ல அரிசியை ரூட்ட மாத்தி, ஏதோ அரிசியைப் பேக் பண்ணி என்னென்னமோ பண்றாங்கப்புன்னு
சொல்லிப் பீதியைக் கிளப்புறாங்கப்பு.
*****
No comments:
Post a Comment