1. முழு சாத்தியபாடும்
பிடிபடாத ஒன்றை வேண்டாம் என்று விலக்குவதே புத்திசாலித்தனமானது. கண்களுக்குத் தெரியாத
ஒன்றில் கவனம் செலுத்துவதை விட கண்ணுக்குப் புலப்படுகின்ற ஒன்றில் கவனம் செலுத்துவதுதான்
சிறந்தது.
2. ஆசைகள்
மனிதர்களை வசமாய்ச் சிக்க வைப்பவைகள். ஆகவே மனிதர்கள் எதிரிகளை விட கவனமாக இருக்க வேண்டியது
யாரிடம் என்றால் தங்கள் மனதில் தோன்றும் ஆசைகளிடம்தான். தன்னுடைய ஆசைகளிடம் கவனமாக
இருக்கும் ஒருவரை வசமாய்ச் சிக்க வைப்பது என்பது அரிது.
3. நாம் நினைத்துக்
கொள்வது போல யாருக்கும் இங்கு எந்த அறிவுரைகளும் தேவையில்லை. அவரவர்களுக்கும் அது
தெரிந்தே இருக்கிறது. தெரிந்தேதான் செய்கிறார்கள். அவர்களிடம் போய் அறிவுரைச் சொல்வது
அறிவுரைச் சொல்பவர்களுக்கு ஆபத்தானது.
4. செயல்பட
முடியாத நேரத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நமக்கு முக்கியம். தவறான முடிவுகளை அந்தப்
புள்ளியில்தான் எடுக்கிறார்கள் மனிதர்கள். அந்த இடத்தில் பொறுமைதான் மிகவும் உதவும்.
அறிவாளி வெற்றி பெற முடியாத இடத்தில் கூட பொறுமைசாலி வெற்றி பெற்று விடுவார்.
*****
No comments:
Post a Comment