2 Dec 2018

அர்த்தப்பாடுகள்


அர்த்தப்பாடுகள்
இனியும் சொல்ல முடியாத விரக்தியில்
வார்த்தைகளை விசிறியடிக்கத் தோன்றுகிறது
இந்த வார்த்தைகளுக்கு யார் அர்த்தம் கொடுத்தார்கள்
அவரவர்களாக செய்து கொண்ட
அர்த்தத்தைத் திணித்த வார்த்தைகளையே
சுற்றிச் சுற்றி உலவ விட்டார்கள்
அறிவுரை பகர்பவர் பொய் சொல்லலாம்
கேட்பவர் உண்மை பகர வேண்டும் என்ற
உண்மை எனும் வார்த்தைக்கான
அர்த்தத்தை அகராதியில் நீங்கள் பார்த்ததுண்டா
வார்த்தைகள் பிடிக்காத விரக்தியில்
மெளனமாகத்தான் முடிகிறதா
சம்மதம் என்ற வார்த்தையைப் போட்டு
மெளனத்தின் அடையாளத்தை அர்த்தப்படுத்தும் போது
இல்லையென்றா புலம்புவீர்கள்
விழும் ஒளி எதிரில்தான் எதிராகத்தான் பிரதிபலிக்குமோ
எதிரில் தெரியும் கண்ணாடி பிம்பத்தில்
இடவல மாற்றம் இருப்பது போல
சிதறி விழும் வார்த்தைகளின் அர்த்தங்களில்
தலைகீழ் மாற்றங்கள் உண்டாகக் கூடும்
வார்த்தைகளாலான இந்தக் கவிதையை
தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளவும்
அவரவர்க்கு உரிமை இருக்கிறது
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...