சம கால அழுத்தங்களும் விடுபடல்களும்
அதி துல்லியம் சாத்தியம் இல்லை. தோராயம்
எப்போதும் சாத்தியம்.
மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்றால்
எதையும் செய்யாமல் இருக்கலாம். ஓரளவுக்குச் சரியாகச் செய்யலாம் என்றால் எதையும் செய்யலாம்.
எல்லாம் தப்பும் தவறுமாக இருக்கும் போது மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்பது எந்த
அளவுக்குச் சாத்தியம்?
அப்படித்தான், அதுதான், அது போலத்தான்
என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் கெடுக்கிறார்கள். ஒருவரை இன்னொருவராக
மாறச் சொல்லித்தான் வற்புறுத்திக் கொல்கிறார்கள்.
ஒரு வரையறையை உருவாக்குகிறார்கள். அந்த
வரையறையிலிருந்து தங்களுக்கு விலக்குக் கொடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும்
அந்த வரையறையின் படி நடக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இப்படித்தான்
மனஉளைச்சலும், மனஅழுத்தமும் வேகமாகப் பரவுகிறது.
மிக துல்லியமான எதிர்பார்ப்பு கடைசியில்
நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது.
இடையில் எந்தத் தீர்வுகளும் இல்லை. பொறுமையாக
இருக்கும் போது முழுமையானத் தீர்வு முடிவில் கிடைக்கிறது.
*****
No comments:
Post a Comment