கருத்து சொல்ல
முடியவில்லையே என்று கவலைப் பட வேண்டியதில்லை. கருத்து சொல்லாமல் இருப்பது மிகவும்
நல்லது. உலகில் பெரும்பாலான மனிதர்களின் பிரச்சனையே அவர்களால் கருத்து சொல்ல முடியாமல்
இருக்க இயலாமைதான். கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டவர்கள்
வரலாறு நெடுகிலும் நிற்கிறார்கள்.
பொதுவாக
கருத்து சொல்வது என்பது யார் கருத்து கேட்கிறார்களோ அவர்கள் விரும்பும் கருத்தைச்
சொல்வதுதானே அன்றி உண்மையான கருத்தைச் சொல்வது அன்று.
உங்களுடைய
கருத்துகளையோ, உண்மையான கருத்துகளையோ யாரும் கேட்க விரும்ப மாட்டார்கள். அப்படி அவைகளைச்
சொல்ல வேண்டுமானால் தனிமையில் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளலாம். மீறி பொதுவெளியில்
உரைக்க வேண்டுமானால் உங்களுக்கு சில பல எதிரிகள் உருவாவதை யார் நினைத்தாலும் தடுக்க
முடியாது.
கருத்து சொல்வது
என்பது ஒரு மாபெரும் கலை. அதற்கு அதிகம் கவனிக்க வேண்டும். கருத்துகளை மிகக் குறைவாகச்
சொல்ல வேண்டும். சமயங்களில் சொல்லாமல் இருக்கவும் வேண்டும்.
*****
No comments:
Post a Comment