12 Dec 2018

மரணம் வழங்குபவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்


மரணம் வழங்குபவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்
நான் என் குற்றத்தைத் தொடங்குவதற்குக்
கால தாமதம் செய்கிறேன்
தண்டனைகள் எரிச்சலோடு
பார்த்துக் கொண்டிருக்கின்றன
சட்டம் தன் கடமையைச் செய்ய
இனியும் காத்திருக்க முடியாது என
பொங்கி எழுகின்றனர்
முன் தயாரிப்புகள் தொடங்குகின்றன
துப்பாக்கிச் சத்தம் ஒலித்து
சரிந்து விழும் ஒருவனை
ஜன்னலடைத்து மனக்கண்ணில்
பார்த்துக் கொள்ளுங்கள்
மரண தண்டனை நிறைவேற்ற
அதிகாரமளிக்கப்பட்ட சீருடை அணிந்த
விறைப்பு நடை போடும் அவர்களை
பயம் கலந்த மிரட்சியோடு மருண்டு பார்த்து
மரியாதை செய்து வணக்கம் வையுங்கள்
உங்களை நோக்கி பாய இருக்கும்
ஒரு தோட்டாவின் எண்ணிக்கையைக்
குறைத்துக் கொள்வார்கள்
தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்காக கூடுதலாக
ஒரு தோட்டாவையும் நிரப்பிக் கொள்வார்கள்
*****

No comments:

Post a Comment