14 Nov 2018

அடித்து விளையாடும் வாழ்க்கை


அடித்து விளையாடும் வாழ்க்கை
குறும்புத்தனத்துக்காக வீட்டில் அடிப்பர்
துடுக்குத்தனத்துக்காக பள்ளியில் அடிப்பர்
எதிர்த்து நின்றால் ரெளடிகள் அடிப்பர்
எதிர்கேள்விகள் வைத்தால்
அரசியலில் இருப்போர் அடிப்பர்
பிடித்தவரை மணம் செய்தால்
சாதி வெறியர்கள் அடிப்பர்
போராடினால் போலீசார் அடிப்பர்
பொறுமையாக இருந்தால் வயிற்றில் அடிப்பர்
ஒதுங்கிப் போனால்
தெரு நாயைக் கல்லெடுத்து அடிப்பது போல
சொல்லெடுத்து அடிப்பர்
அவனவனும் அடிச்சு விளையாடத்தான்
வாழ்க்கை
அடி வாங்கிச் செத்தவர் அதிர்ஷ்டக்காரர்
தினம் தினம் ஏதோ ஓர் அடிக்கு தயார் செய்து கொள்ளும்
அடி வாங்கிச் சாகாதவர் துருதிர்ஷ்டக்காரர்
*****

2 comments:

  1. ஆமாங்க ஐயா.... எனக்கெல்லாம் அடி கொஞ்சம் ஓவர்தான்...

    ReplyDelete
    Replies
    1. நகரப் பேருந்தில் இடிபடாத மனிதரும்
      நேர்மையான வாழ்வில் அடிபடாத மனிதரும் இல்லைதான் ஐயா!

      Delete

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...