14 Nov 2018

மதுப்புட்டியை, வெண்சுருட்டை...


திரைப்படம் சொல்கிறதென்று மாவு அரைக்கும் இயந்திரத்தை, சட்டினி அரைக்கும் இயந்திரத்தைத் தூக்கிப் போட்டு உடைப்பதாகக் கேள்விபடுகிறேன். அதற்கு, மதுப்புட்டியை, வெண்சுருட்டைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம்.
*****
குடியிருப்புப் பகுதிகளில், விளைநிலங்களில் யானைகள் புகுவது செய்தியாகிறது. யானைகளின் வழித்தடங்களில் நிகழ்ந்த ஆக்கிரமிப்புகள் எதுவுமே செய்தியாகவில்லையே. யானைகளின் வழித்தடங்களில் நிகழ்ந்த காடழிப்புகள் எதுவுமும் கூட செய்தியாகவில்லையே.
*****
நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற அவசியமில்லை. களம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
களம் சேறாக இருக்கும் போது வேறு வழியில்லை.
இதை நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். நிச்சயம் நீங்கள் வேறு மாதிரியாக யோசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
*****
அதில் கவிதை இல்லை என்று தீர்மானித்தால் அப்படியே விட்டு விடுங்கள். அதில் கவிதை எழுதாதீர்கள்.
*****
ஆளுக்கொரு ஐடியா சொல்வார்கள். அவர்களால் அப்படிச் சொல்லாமல் இருக்க முடியாது. அப்படிப் பழகி விட்டார்கள். அதனாலே வாழ்க்கை கடினமாகிறது என்று நினைத்தால் நீங்கள் யாருடைய ஐடியாவையும் கேட்காதீர்கள்.
உங்களுடைய எளிமையானப் பாதையிலேயே செல்லுங்கள். எளிமையானப் பாதைக்கெல்லாம் ஐடியா தேவையில்லை. எளிமையானப் பாதைக்கு ஐடியாவும் கிடையாது.
எல்லா ஐடியாக்களையும் கேட்டுக் கொள்ளலாம். எல்லாவற்றையும் செயல்படுத்த முடியாது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...