14 Nov 2018

கொலை போதை ஏற்றிக் கொள்ளும் டாஸ்மாக்


கொலை போதை ஏற்றிக் கொள்ளும் டாஸ்மாக்
ஏதோ ஓர் ஊரில் அரிதாக
சில பல ஆண்டுகளுக்கு
எப்போதோ ஒரு முறை நடக்கும் கொலைகள்
அடிக்கடி நடக்கின்றன
எவர் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும்
விழலாம் இழவு
தாயை வெட்டுகிறார் மகன்
மகனை வெட்டுகிறார் தந்தை
சித்தப்பா பெரியப்பா இருவரில் ஒருவர்
மாமன் மச்சான் இருவரில் ஒருவர்
வெட்டிக் கொண்டு சாய்கின்றார்
மனைவியை வெட்டுகிறார் கணவர்
அண்ணன் தம்பிகள் கத்தியால் குத்திக் கொள்வர்
துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளவில்லை என
நாம் பெருமைப்படலாம்
இதையும் பேசிக் கொண்டு
இன்னும் கொலைகளுக்காக
கொலைவெறியோடு போதையேற்றிக் கொள்கிறது
ஊருக்கு ஊர் ஏதேனும் ஒரு டாஸ்மாக்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...