14 Nov 2018

சர்க்கார், ராக்கர்ஸ் மற்றும் மரங்கள்


சர்க்கார், ராக்கர்ஸ் மற்றும் மரங்கள்
திரைப்படத்தில் சரியான சர்க்காரை பார்க்கலாம். சர்க்கார் திரைப்படத்தை சரியான கட்டணத்தில் பார்க்க முடியுமா?
*****
அந்தக் காலத்தில் திருட்டு வி.சி.டி. வாடகைக் கட்டணமே எழுபது, நூறு என்று வாங்கியிருக்கிறார்கள்.
அப்புறம் திருட்டு டி.வி.டி. வந்த பிறகு திருட்டு வி.சி.டி. வாடகைக்கு விடுவது போயேப் போச்சு.
அப்புறம் வளர்ச்சி பென் டிரைவில் காப்பி செய்வதாக இருந்தது.
இப்போதெல்லாம் டேரக்ட் டெளன்லோட்தான்.
போகிறப் போக்கைப் பார்த்தால் சில சினிமாக்கள் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னே இணையதளங்கள் ரிலீஸ் செய்து விடும் போலிருக்கிறது.
*****
மரங்களை வளர்க்க வேண்டும் என்பது ஒரு விளம்பரத்திற்கான பிரச்சாரப் போக்கு என்றே நினைக்கிறேன். மரங்களை வெட்டுபவர்கள்  செய்யும் சாமர்த்திய அரசியலாகவே அது இருக்கிறது. 
எனக்குத் தெரிந்து ஆற்றங்கரைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் பிரமாண்ட மரங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த மரங்கள் எவையும் யாரும் நட்டு வைத்து வளர்ந்தவைகள் அல்ல. அவைகளாகவே இயற்கையான விதைப்பரவல் மூலம் வளர்ந்தவைகள்தான்.
யாரும் நடா விட்டாலும் மரங்கள் வளரும். பரவுவதும், வளர்வதும் அதன் இயற்கையான குணங்கள்.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் மரங்களின் விதைப் பரவலுக்குத் தடையாக இல்லாமல் இருப்பதும், தேவையில்லாமல் மரங்களை வெட்டாமல் இருப்பதும்தான்.
நாம் எப்படி விதைப்பரவலுக்குத் தடையாக இருக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சான்றைச் சொல்ல வேண்டுமானால்... வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை மண் தரையாகப் பராமரிக்கலாம். சுற்றிலும் காங்கிரீட்டைப் போட்டு விடுகிறோம். அப்புறம் எப்படி பறவையின் எச்சம் மூலம் ஒரு விதை விழுந்தால் அது அங்கே முளைக்கும்?
யாரும் எதுவும் செய்யா விட்டால் மண் தரையில் ஒரு வேப்பங்கன்றாவது முளை விடும். அப்படித்தான் இயற்கையான சூழல் இருக்கிறது.
அப்படி ஒரு வேப்பங்கன்று கூட முளை விடாத நிலையில் நாம் இருப்போமானால் சூழல் செயற்கையாக இருக்கிறது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் செயற்கையாக மாற்றிய சூழல்களை இயற்கையாக மாறுவதற்கான செயல்களைச் செய்வதும், செயற்கையாக மாற்றிய சூழல்களை மென்மேலும் செயற்கையாக மாற்றாமல் இருப்பதும்தான்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...