9 Nov 2018

விளக்க முடியா எளிமைகள்


விளக்க முடியா எளிமைகள்
இதை விளக்கினால்
அந்த அது எளிமையிலிருந்து தப்பி விடும்
இதை அப்படியே பாருங்கள்
விளக்கமில்லாத விளக்கமாக அது திகழட்டும்
வாழ்க்கை எளிது
பகிர்தல் எளிது
அன்பு எளிது
கண்ணீர் எளிது
பரிவு எளிது
அரவணைப்பு எளிது
சுயநலம் பிடித்த பிராணிகளுக்கு
அதை விளக்குவது அரிது
விளக்கிப் பார்ப்பினும்
அதுகள் அதைப் புரிந்து கொள்தல்
அரிதினும் அரிது
விளக்க முடியா எளிமை வாழ்க்கை
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...