9 Nov 2018

காதைக் கிழித்து விடுகிறார்கள்


பட்டாசு வெடிக்கும் நேரம் குறைந்ததால் மாசு அளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தலைவர்களின் வருகையின் போதும் இதையே கடைபிடிக்க வேண்டும். காதைக் கிழித்து விடுகிறார்கள்.

சர்க்கார் என்ற திரைப்படம் பற்றிக் கேட்கிறார்கள். கார்ப்பரேட் கிரிமினல்கள்தான் நாட்டை ஆளவோ வழிநடத்தவோ முடியும் போலிருக்கிறது.

 நன்றாக டான்ஸ் ஆடினால் மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்கிறார்கள். என்ன செய்வது? எனக்கு டான்ஸ் எப்போதும் உடான்ஸ் ஆகி விடுகிறது.

தமிழ்த் திரைப்பட வியாபாரம் நூறு கோடிகளைத் தாண்டி விட்டது.
வாவ்!
புத்தக வியாபாரமும் அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கதைத் திருட்டு சில பல லட்சங்களைத் தொட்டிருக்காது இல்லையா!

எதுவும் வராமல் இல்லை. வருவதை விரும்ப மாட்டேன்கிறோம். இப்படித்தான் வர வேண்டும் என்று ஒரு பிடிவாதத்தை வைத்துக் கொண்டு வருவதை நிராகரிக்கிறோம்.


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...