மெர்க்குரி - காலம் கடந்து வந்த மெளனப்படம்
கார்த்திக்
சுப்புராஜூவின் 'மெர்க்குரி' திரைப்படம் மீண்டும் மெளனப்படங்களின் ஞாபகத்தைக் கிளறி
விட்டது. இது உண்மையில் மெளனப்படம் என்றும் சொல்ல முடியாது. இசை ஒலித்துக் கொண்டு
இருக்கிறது. கதை மாந்தர்கள் பேசுவதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் பாத்திர உருவாக்கம்
செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
முதன் முதலில்
தமிழகத்தில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் மெளனப்படங்கள்தான். பெரும்பாலும் எல்லாம்
வெளிநாட்டுப் படங்கள். அப்போது ஓர் ஒலிப்பெருக்கியை வைத்து கிரிக்கெட் மேட்சுக்குச்
செய்வதைப் போல ரன்னிங் கமென்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விபட்ட
போது ஆச்சரியமாக இருந்தது.
1929 இல்தான்
முதன் முதலாக பேசும் படத்தைப் பார்க்கும் பாக்கியம் தமிழ்கூறு நல்லுலகுக்குக் கிடைத்திருக்கிறது.
சென்னை எல்பின்ஸ்டன் தியேட்டரில் முதல் பேசும் படம் திரையிடப்பட்டு இருக்கிறது.
மெளனப்படம்
ஒரு நல்ல முயற்சிதான். பாத்திரங்கள் பேசாமல் கதையைச் சொல்வதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.
'மெர்க்குரி' திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்
என்றுதான் சொல்ல வேண்டும்.
துணிச்சல்
விடுதலை தருகிறது. பயம் அது பாட்டுக்கு சிந்திக்க வைத்துக் கொண்டே செல்கிறது.
அதீதமாக ஆசைப்படாமல்
இருந்தால் அதீதமாகத் துன்பப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் அனுபவப்பட்டவர்கள். வாஸ்தவம்தான்
போலும்.
No comments:
Post a Comment