8 Nov 2018

வெட்கப்பட்டு புன்னகைக்கிறார் காந்தி


வெட்கப்பட்டு புன்னகைக்கிறார் காந்தி
இந்தக் காலத்தில்
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு
இருபது ரூபாய்தான் மதிப்பு என்கிறான் ஒருவன்
ஆமாம் ஆமாம்
அதைத்தான் இருபது ரூபாயில் டோக்கன் போட்டு
நிரூபித்துப் போனான் ஒருவன் என்கிறான் மற்றொருவன்
கொடுத்தப் பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு
நோட்டாவுக்கு ஓட்டைப் போடவும்
பெரிய மனசு வேண்டும் என்கிறான் அந்த ஒருவன்
கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும் என்றால்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
போடுவதற்குத்தான் போடுவேன் என்பதற்கு
இன்னும் பெரிய மனசு வேண்டும் என்கிறான்
அந்த மற்றொருவன்
கொடுக்கப்பட்ட அத்தனை நோட்டுகளில் இருந்த
எல்லாவற்றிற்கும் மெளன சாட்சியாகி விட்ட
காந்தி வெட்கப்பட்டு புன்னகைக்கிறார்
ஓட்டுக்குக் கொடுத்தால்
நோட்டு செல்லாததாகி விடும் என்று
கையெழுத்து விட்டு கைத்தடியூன்றி
எழுந்து நடக்க எத்தனிக்கும் அவரை
அங்கேயே இருத்தி மீண்டும் மீண்டும்
மரியாதை நிமித்தம் மானாங்காணியாய்
அடிக்கப்படுகிறார் அச்சுகளால்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...