7 Nov 2018

நாம் கேட்டு உறங்கும் நாராசத் தாலாட்டுகள்


நாம் கேட்டு உறங்கும் நாராசத் தாலாட்டுகள்
நாம் பாடிய தாலாட்டுகள்
தலைமுறைகளைத் தூங்க வைத்து விட்டன
காலமிது காலமிது
எப்படியாவது பிழைத்துக் கொள் என்று பாடிய தாலாட்டு
அடிமைகளாக்கி விட்டது
தஸ் புஸ் என்ற உளறும் மொழியைக்
கற்றுக் கொள் என்று பாடிய தாலாட்டு
உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்து விட்டது
இருக்கும் வரை சுருட்டிக் கொள் என்று பாடிய தாலாட்டு
சகோதர ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டது
திரையைக் காட்டிச் சோறூட்டியத் தாலாட்டு
பிம்பங்களின் காலடிகளில்
தொண்டனாய்த் தெண்டனிட வைத்து விட்டது
பெட்டிகளைப் பார்த்தால்
எத்தனைக் கால்களில் வேண்டுமானால் விழு என்று பாடிய தாலாட்டு
கட்டளைக்குக் கீழ்படியும் ரோபாவாக்கி விட்டது
பட்டுப் பீதாம்பரங்கள் பிடுங்கப்பட்ட
கந்தல் துணித் தொட்டில்களில் இடப்பட்ட
தாலாட்டுகள் நமக்காகப் பாடப்படுகின்றன
உறங்குவதற்கான தூக்க மாத்திரைகளின் நெடியை
வீச்சமாய் வீசிய படி
நாராசமாய்க் கேட்கும் தாலாட்டில்
எப்படி இப்படி உறங்கிக் கிடக்கிறோம் நாம்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...