13 Nov 2018

மினுமினுக்கும் யூதாஸின் காசுகள்


மினுமினுக்கும் யூதாஸின் காசுகள்
இலை உதிரும் மரத்தின் அடியில்
அமர்ந்திருக்கும் எங்களுக்கு
ஊழலை உதிர்த்து எறியத் தெரியவில்லை
கையூட்டைக் களையத் தெரியவில்லை
ஓட்டுக்கு நோட்டை வாங்காமல் இருக்கத் தெரியவில்லை
தவறுகளைத் தட்டிக் கேட்கத் தெரியவில்லை
கண் முன்னே எல்லாம் களவு போவதைக்
கண்காணித்துக் காக்கத் தெரியவில்லை
களை பெருத்த களர் நிலத்தில்
உதிராத இலை மண்டிய புதர்கொடி அருகில்
நச்சுப் பாம்புகள் சூழ,
விஷமப் பூச்சியினங்கள் பறக்க
இலவசமாய்க் கிடைக்கிறதென்பதற்காக
விசத்தை வாங்கிப் பருகிக் கொண்டிருக்கிறோம்
ஒற்றைச் சவப்பெட்டியில் ஒன்பது பேரைப் புதைத்து விட்டு
ஒன்பதும் பேருக்கும் ஒன்பது சவப்பெட்டி என்று
கணக்கெழுதுபவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒற்றைச் சவப்பெட்டியில் நெருக்கியடித்துக் கொண்டு
ஒன்பது பேருமாக முக்கி முனகிப் படுத்துக் கொள்கிறோம்
ஆணிகள் அறையப்படுகின்றன
எங்கள் தலைவர்களே ஏன் எம்மைக் கை வீட்டீர்?
யூதாஸின் காசுகள் மினுமினுப்பதைப் போல
எங்கள் தலைவர்கள் புன்னகைக்கிறார்கள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...