6 Nov 2018

அசம்பாவிதம் வேண்டுபவர்கள்


அசம்பாவிதம் வேண்டுபவர்கள்
எப்போதும் இருக்கும் சூரியனைப் பற்றி
யாருக்கென்ன கவலை
எப்போதோ வெளிச்சக் கீற்று வீசும்
மின்னலைப் பற்றியே பேச்சு
விழாத நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி
யார் யோசித்தார்கள்
விழப் போகின்ற ஒரு விண்கல்
ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து விடுகிறது
ஞாயிறு விடுமுறை வழக்கமான சலிப்போடு
கடந்து விடுகிறது
வாரத்தின் இடையில் வரும் ஒரு விடுமுறை
களிப்பை அள்ளி வீசுகிறது
வழக்கம் யாருக்குப் பிடிக்கிறது
அசம்பாவிதம் தலைப்புச் செய்தியாகி
அதையே பேச வைக்கிறது
விவசாயி தற்கொலை செய்து கொள்வான்
மீனவன் காணாமல் போவான்
போராடுபவன் குண்டர் சட்டத்தில் கைதாவான்
வாடிக்கைதானே எல்லாம்
அரசியலுக்கு வரப் போகுபவர்களைப் பற்றி
கிசுகிசுக்களை அள்ளி வீசினால்
டி.ஆர்.பி.யை எகிறடிக்கலாம்
வாய் பிளக்க வைத்து காசு பார்க்கலாம்
வழக்கம் யாருக்குப் பிடிக்கிறது
அசம்பாவிதம் தலைப்புப் செய்தியாகி
அதையே பேச வைக்கிறது
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...