5 Nov 2018

மீ டூ


அன்போடிருக்க மென்மையாக இருக்க வேண்டும். மென்மையாக இருக்க அன்போடிருக்க வேண்டும்.
கோபம் வன்மையாக்கி விடும். வன்மை கோபமாக்கி விடும்.
வன்மையாகிப் பாருங்களேன். மென்மையான நாக்கு முதலில் படமெடுக்கும். மென்மையான விழிகள் முதலில் சிவக்கும். அப்புறம் வன்மையான கைகள், கால்கள் காரியத்தில் இறங்கி விடும்.
www.vikatabharathi.blogspot.com

உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அதற்காக வாழ்வில் உணர்ச்சிவசப்பட முடியாமல் இருக்க முடியாது.
www.vikatabharathi.blogspot.com

எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பொது மனதுக்குள் வரும் சுகானுபவம் இருக்கிறதே. ஞானம் என்கிறார்கள் அதை. எளிமை என்கிறேன் நான்.
www.vikatabharathi.blogspot.com

ஒரு ஹீரோவின் பெயரைப் போட்டு அவர் நடிக்கும்... என்று படத்தின் பெயரைப் போடுகிறார்கள். அந்தப் படத்தில் மற்றவர்கள் யாரும் நடிக்கவில்லையா?
www.vikatabharathi.blogspot.com

மீ டூ பற்றிக் கேட்கிறார்கள்.
எந்த ஒன்றைப் பற்றிப் பேசத் தயங்குகிறோமோ அதுவே குற்றத்தின் மையப் புள்ளி. பேச்சுதான் சட்டத்தை விட வலிமையான ஆயுதம்.
பெண்கள் பேசுவதைக் கேட்டு அதற்கே இப்படிப் பயந்தால் எப்படி?
அவர்கள் பேசட்டும். நீங்களும் பேசலாம்.
www.vikatabharathi.blogspot.com

No comments:

Post a Comment