கஜா புயல் முறித்தெடுத்த மின்கம்பங்கள்
கஜா புயலால் மிக அதிகம் பாதிக்கப்பட்டவைகள்
மரங்கள். டெல்டா மாவட்டங்களின் மரங்கள் அனைத்தும் கஜா புயலால் சூறையாடப்பட்டு இருக்கிறது.
கஜா புயலின் பாதிப்புக்கு மரங்களுக்கு
அடுத்து அதிக பாதிப்புகளுக்கு உள்ளானவை போஸ்ட் மரங்கள் என்று இப்பகுதியில் சொல்லப்படும்
மின் கம்பங்கள். ஒவ்வொரு மின்கம்பமும் இரும்புக் கம்பிகள் உள்ளீடப்பட்ட காங்கிரீட்
கலவையால் ஆனவைகள்.
வெகு அரிதாக சில இடங்களில் மின் கம்பங்களில்
தந்திக் மரங்கள் என்று இப்பகுதியில் சொல்லப்படும் இரும்புக் கம்பங்களும் உள்ளன. இவைகளில்
இரும்புக் கம்பங்களில் அதிக பாதிப்புகளில்லை. அவைகளில் பெரும்பாலானவை நிமிர்ந்து நிற்கின்றன.
அப்படியே சாய்ந்திருந்தாலும் ஓரளவே சாய்ந்திருக்கின்றன.
காங்கிரீட் போஸ்ட்டுகள் மிக அதிக அளவில்
முறிந்து கிடக்கின்றன. அதிலும் பழைய காங்கிரீட் போஸ்டுகளைக் காட்டிலும் புதிய காங்கிரீட்
போஸ்ட்கள் அதிக அளவில் முறிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்த பட்சம்
ஐம்பதோ அல்லது அதற்கு அதிகமாகவோ மின் கம்பங்கள் தேவைப்படும்.
இவைகளை எவ்வளவு விரைவாகக் கட்டமைக்கிறார்களோ
அவ்வளவு விரைவாக ஊராட்சிகள் ஒளிபெறும்.
டெல்டா மாவட்டங்கள் பலவும் குக்கிராமங்களை
அதிகம் கொண்டவை. அந்த வகையில் குக்கிராமங்கள் ஒளிபெற இருபது நாட்களுக்கு மேல் ஆகலாம்.
ஒரு மாதத்துக்கும் மேல் ஆகலாம் என்றே பலரும் பேசிக் கொள்வதைப் பார்க்கையில் டெல்டா
மாவட்டங்கள் மின்சார ஒளியைத் தரிசிக்க ஒரு மாதம் காத்திருக்கத்தான் வேண்டும்.
*****
No comments:
Post a Comment