புயலைப் பின்தொடரும் பேரிடர்கள்
கஜா புயலை
விடவும் கஜா புயல் குறித்து வெளிவரும் கருத்துகள் பயங்கரமாக இருக்கின்றன.
கஜா புயலையே
கூஜாவில் அடைத்து விட்டோம் என்கிறார்கள்.
புயல் அடித்தால்தான்
குடிக்க குடிநீர் கிடைக்கும் என்கிறார்கள்.
புயல் அடித்தப்
பகுதிகளில் எல்லாம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். 25 ரூபாய்க்கு விற்ற
குடிநீர் கலன்களை 250 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓவர்டேங்கில்
நீர் நிரப்ப ஜெனரேட்டர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்று செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செல்பேசியைச் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்துக்கு நாற்பது ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கஜா பாதித்த
பார்வையிடாப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. கஜா சீரழித்த கவனத்துக்கு வராத நிறைய பகுதிகளும்
இருக்கின்றன.
மக்கள் தங்களுக்குத்
தாங்களே தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வபோது
வருகை தரும் ஒரு சில தன்னார்வலர்கள்தான் ஒரே ஆறுதல்.
பாதிப்பு நிறையதான்.
அழிவு அதிகம்தான். ஆனால் அவைகள் அதிவேக நடவடிக்கைகளால் சரிசெய்ய முடியாதவைகள் அல்ல.
போர்க்கால
நடவடிக்கை என்று சொல்வார்களே! அதுதான் தற்போது தேவைப்படுகிறது.
நிகழ்ந்திருப்பது
ஒரு போர்தான்.
இயற்கை மனிதன்
மேல் நிகழ்த்திய போர்.
இயற்கை மரங்களின்
நிகழ்த்திய போர்.
இயற்கை அடிப்படைத்
தேவைகள் என்று சொல்லப்படும் உறைவிடம், மின்சாரம், தகவல்தொடர்பு ஆகியவற்றின் மீது
நிகழ்த்திய போர்.
போரை நிகழ்த்திய
இயற்கை அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் மழையாய் மீண்டும் படையெடுக்காமல் இருந்தது.
இப்போது மழையாய் அது தொடர ஆரம்பித்து இருக்கிறது.
*****
No comments:
Post a Comment