5 Nov 2018

படுகொலை


படுகொலை
சனநாயகப் படுகொலை என்பார்களே
என்ன செய்வது
மறுதேர்தலில் மறுபடியும் குதிக்கும்
அவர்களை நம்பித்தான்
மறுபடியும் வாக்களிக்க வேண்டியிருக்கும்
தற்கொலைப் பாறையை
வேடிக்கைப் பார்க்க வருபவர்கள்
தள்ளி விடப் படும் மோசமான தேசமடா இது
*****

களங்கம்
அவனவனும் சடார் சடாரென்று
காலில் விழுந்து விடுவதால்
சுத்தமாக இருக்கின்றன கால்கள்
கைகள் இரண்டும்தான்
களங்கப்பட்டு கிடக்கின்றன
வாங்கி வாங்கி
அதனாலென்ன
சுத்தமான கால்களுக்கு நமஸ்காரம்
அசுத்தமான கைகளுக்கு தங்கக்காப்பு
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...