4 Nov 2018

இரவுகளின் பிரார்த்தனை


இரவுகளின் பிரார்த்தனை
இரவின் இளைப்பாறலைத் தர வேண்டும் எனும்
பிராத்தனை ஒலிக்கத் தொடங்குகிறது
உறங்கும் பகல் இரவாகிறது
உறங்கும் பகலில் இரவை விழிக்கச் செய்து
காசுக்கென வேலை பார்ப்பதை
கேலி செய்தபடி ஒளி வீசுகின்றன நட்சத்திரங்கள்
அரை குறையுமாக தேய்ந்தும் வளர்ந்தும்
விழித்திருக்கும் நிலா
அமாவாசை நாளில் ஓய்வெடுத்துக் கொள்கிறது
வெளிநாட்டில் ஒளி கொள்ளும் பகலுக்காக
இருள் கொள்ளும் பொழுதில் உழைக்கும் நாட்டில்
பிறந்ததற்காக பிரார்த்தனை ஒலிக்கத் தொடங்குகிறது
மனித்த இந்தப் பிறவி தொலையட்டும்
மறுபிறவியிலாவது உறக்கம் கொள்ளத் தக்க இரவு அமையட்டும்
பிரார்த்தனை மீண்டும் மீண்டும் ஒலிக்கத் தொடங்குகிறது
கொட்டாவிச் சத்தம் விண்ணைப் பிளக்கிறது
வானம் வாய் பிளந்து துடித்துக் கொண்டிருக்கிறது
சூரியச் சுடரைத் துப்பி இரவை ஒரு முடிவுக்குக் கொண்டு வர
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...