கடனே சிவம்!
பசியென்று
வந்தவனுக்கு
பைசா
போடாமல்
பைசா
பைசாவாய்ச் சேர்த்து வைத்ததை
தனிநபர்க்
கடனுக்குக் கட்டினர்
உழைத்தவனின்
வியர்வைக்குப்
பேரம்
பேசி
அதில்
ஒதுக்கியதை
வாழ்நாள்
முழுவதும்
வீட்டுக்
கடனுக்குக் கட்டினர்
விலைப்
பட்டியலைப் பார்த்துப் பார்த்து
உணவுண்டு
மிச்சப்படுத்தியதை
மருத்துவக்
காப்பீட்டுக்குக் கட்டினர்
அவசியமற்றவைகளை
வாங்கி
அவசியமானதை
விலக்கி
அதில்
சாமர்த்தியம் செய்ததை
தனிநபர்
காப்பீடு செய்தனர்
வாங்கிய
நிவாரணத் தொகையில்
வாகனக்
கடன் தவணையைச்
செலுத்தி
விட்டு விரையும் அவர்கள்
எவன்
வயிற்றில் அடித்து
எவனிடமிருந்து
லஞ்சம் வாங்கி
எப்படிக்
கையூட்டுச் செய்து
கல்விக்
கடனை அடைப்பதென
யோசித்துக்
கொண்டிருந்தனர்
*****
No comments:
Post a Comment