3 Nov 2018

குஞ்சு மீன் நீந்தக் கற்றுக் கொண்டது


குஞ்சு மீன் நீந்தக் கற்றுக் கொண்டது
மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும்
இவ்விடத்தில்
அது நீந்தாமல் சோம்பிக் கிடக்கிறது
கட்டணம் லட்சங்களில் கட்டியாகி விட்டது
மிஸ்கள் போராடிப் பார்த்து விட்டார்கள்
டீ கிரேடுக்கும் கீழாக போடுவதென
முடிவாகி விட்டது
கற்றல் குறைபாடு இருக்கக் கூடுமென
மனநல மருத்துவரைப் பரிசீலிக்க
பரிந்துரைத்து ஆகி விட்டது
தாய் மீனும் தந்தை மீனும்
எப்படியாவது நீந்தக் கற்றுக் கொண்டு விடு என
குஞ்சு மீனிடம் கேவிக் கேவி அழுதார்கள்
மந்தமாகிக் கொண்டே போனது குஞ்சு மீன்
வெறுத்துப் போய் ஒரு நாள் கடலில் தூக்கி எறிந்தார்கள்
நீந்தக் கற்றுக் கொண்டது குஞ்சு மீன்
*****

No comments:

Post a Comment

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள் எதற்கும் கலங்காத ஊர் நடுவே நின்ற பெருமரம் இரண்டு முறை நடுங்கியது புயல் காற்றைக் கண்டு பயப்படாமல் ...