உங்கள் உரிமை சுதந்திரம்
வெட்டி
வேலைக்காரன்தான்
லட்சியவாதம்
பேசுபவன்
சினிமா
நாயகன் அரசியல் தலைவனாகக் கூடாது
என
பிரச்சாரம் செய்பவன்
திரையரங்கில்
டிக்கெட் கிழிப்பவன்
குடிப்பவர்களின்
காலில் விழுபவன்
மதுக்கடை
அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவன்
பெண்களை
மதிப்பவன் என்பவன்
யாருக்கும்
தெரியாமல் அலைபேசிக்குள்
ஒரு
மாதிரி படம் பார்க்க அலைபவன்
நேர்மை
நியாயம் கம்யூனிசம் கோஷமிடுபவன்
சைக்கிள்
கேப்பில் சிபாரிசுக்கென காசு பார்த்து
ஒரு
வேலைக்கு நான்கு பேருக்குப்
பரிந்துரைக்
கடிதங்களை விசாலமாய் நீட்டுபவன்
ஒரு
ப்ளாட் ஒரு அபார்ட்மென்ட கனவு இருக்கிறது
அதற்காக
ஒருவனைக் கொன்று தீர்க்கவும்
நுகர்வு
மோகத்தின் குரூர ருசி மனதுக்குள் வசிக்கிறது
ஊரும்
நாடும் நன்றாக இருக்க வேண்டும்
நல்ல
மழைப் பெய்ய வேண்டும்
நல்லவர்களுக்கு
நல்லது நடக்க வேண்டும்
தாம்
நல்லவராக இருக்க வேண்டும் என்று
தம்மிடம்
யாரும் நிர்ப்பந்திக்காதீர்கள்
மற்றவர்களுக்கு
அப்படி ஓர் அழுத்தம்
கொடுப்பவன்தான்
அன்றோ நல்லவன்
மனதுக்குள்
ஒரு மிருகத்தை வளர்க்க
எல்லாருக்கும்
உரிமை சுதந்திரம் இருக்கிறது
*****
No comments:
Post a Comment