15 Nov 2018

இன்றைய ராசிபலன்


இன்றைய ராசிபலன்
சில நிலைமைகள் இருக்கிறதே... கொடுமையானது. அது இப்படியாகவும் இருக்கலாம். அதாவது,
யாரிடமும் எதையும் பேசவும் முடியாமல் போகலாம், நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியாமலும் போகலாம். அவரவர்கள் மனம் போன போக்கில் இருப்பார்கள். ஆகவே ஒன்றும் சொல்லவும் முடியாமல் போகலாம்.
சில விசயங்களைப் பொருத்த வரையில் இனி அதில் ஈடுபட வேண்டாம் என்று நினைக்கலாம். அதில் என்ன செய்கிறார்கள் என்றே  புரியாமல் போகலாம். அது குறித்த எந்தக் கருத்தையும் உடன் இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ள மறுப்பார்கள். தேவையில்லாத கருத்து வேறுபாடு எழுமோ என்று ஐயப்பட நேரிடும் மற்றும் பயப்படவும் நேரிடும்.
தன்னுடைய யோசனைகளை யாரும் கேட்காத போது, தன்னுடைய யோசனைகளை வலிய சொல்லிக் கொண்டிருக்கும் முட்டாள்தனத்தை  செய்து கொண்டு இருக்க நேரிடும். ஆக, அவைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தான் உண்டு, தன் வேலையுண்டு இருப்பதுதான் தனக்கு நல்லது என்று எண்ணத் தோன்றிடும்.
அதை மீறி, யாருக்காவது எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று இறங்கினால் தீராத மன இறுக்கத்தில் சிக்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.
யாராவது எப்படியாவது போகிறார்கள்? அவர்களை எச்சரித்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அன்பாக எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் எனும் போது எதற்கு தேவையில்லாமல் விழலுக்கு நீர் இறைக்க வேண்டும்? என்ற சலித்த மனப்பான்மை தன்னையும் அறியாமல் ஏற்படும்.
ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு மாதிரி. எந்த மனதுக்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்பது எப்போதும் புரியாத புதிர். ஏன் அந்தப் புதிருக்குள் சென்று தேவையில்லாமல் சிக்கிக் கொள்ள வேண்டும்? என்று ஒதுங்கத் தோன்றும்.
இதைப் படிக்கும் போது தினசரி ராசி பலன் படிப்பது போல இருக்கிறதா? இப்படித்தான் ராசிபலன்கள் எழுதப்படுகின்றன. கிரகச்சாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன. ஆகவே இதை எந்த ராசிக்கு எழுதினாலும் அப்படியே பொருந்தும். அதற்குக் காரணம் எல்லா ராசிகளும் இந்த விசயத்தில் ஒன்றுதான்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...