12 Nov 2018

உச் கொட்டுவதற்கும், அச்சச்சோ என்பதற்கும்


            யார் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையோ அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. அவ்வாறு விலகி விடுவதால் சம்பந்தப்பட்டவர் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை  என்ற வருத்தம் உங்களுக்கு ஏற்படுவதில்லை, இப்படி நம்மைப் பேச்சைக் கேட்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்களே என்ற வருத்தம் சம்பந்தப்பட்டவருக்கும் ஏற்படுவதில்லை. அது சரி! ஏன் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள்?
*****
            யாரையும் வற்புறுத்திப் பணிய வைக்கக் கூடாது. நேரடியாக மிரட்டியும் பயமுறுத்தக் கூடாது. மறைமுகமாகச் செய்யலாம். அதில் நம் கை கறைபட்டு விடக் கூடாது. ஒரு சுனாமிப் பொழுதில் எஸ்.கே. இப்படிச் சிந்தித்தார். அப்புறம் சுனாமி அவரைச் சுருட்டிக் கொண்டு போனது தனிக்கதை. அதன் கை கால்களில் விழுந்து எஸ்.கே. தப்பி வந்தது பெருங்கதை. இந்த இடத்தில் சுனாமி என்றால் சுனாமி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
*****
            அவரவர்கள் செய்ததற்கு அவரவர்கள் அனுபவிக்கிறார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. உச் கொட்டுவதற்கும், அச்சச்சோ என்பதற்கும் நிறைய இருக்கிறது. மற்றபடி... அவரவர்கள் என்ன செய்தார்கள் என்று ஞாபகம் இருக்காது என்றாலும் அந்த நேரத்தில் அவரவர்கள் பிடிக்காமல் போகிறார்கள் என்பது சரியாக ஞாபகம் இருக்கும்.
*****
            வறட்டுப் பிடிவாதம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காது. காற்புள்ளிகளைப் போட்டுக் கொண்டே செல்லும். மனசு வைத்தால் ஒரு முற்றுப்புள்ளி ஆயிரம் காற்புள்ளிகளை வேலையில்லாமல் ஆக்கி விடும்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...