11 Nov 2018

குறிஞ்சிப் பூக்கும் வருடம்


'சூழலியலாளர்களால்' இந்தச் சொல்லை சத்தமாகச் சரியாக உச்சரிக்க முடிந்தால் உங்கள் நாக்கு சரியாகத்தான் புரள்கிறது.

மனிதர்கள் மட்டுமா? பறவைகளும்தான் மரங்களை நடுகின்றன, எச்சங்கள் மூலமாக. பறவைக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள், 'மரம் நடு, மழை பெறு' என்பதை!

2004 ஆம் வருடத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதுதான் குறிஞ்சி நீலம் நீலமாகப் பூத்துத் தள்ளியதை செய்தித்தாள்களில் பார்த்தது. இப்போது 2018. சரியாக பனிரெண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. குறிஞ்சிப் பூக்கும் வருடம். நீலகிரி மலைத்தொடர்களில் பூக்கும் குறிஞ்சிப் பூக்களைப் பார்க்க வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வருவார்கள். நாம்? விடுங்கள்! செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொள்வோம். யூ டியூப்பில் யாரோ எடுத்து போடாமலா விட்டு விடுவார்கள்.

அப்போதெல்லாம்... அதாவது சரியாக பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகத்தான்... நான்கு முக்குகள் திரும்பினால் ஓர் ஆலமரமோ, அரச மரமோ கட்டாயம் பார்க்கலாம். இப்போது செல்போன் டவர்களைத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் நீங்கள் காவிரி கடைமடையின் வெள்ளையாற்றின் கரைகளில் பார்க்க வேண்டும். சர்வ சுத்தமாக மொட்டை அடித்து இருக்கிறார்கள். அவ்வளவு ஆலமரங்களும், அரச மரங்களும், பனை மரங்களும், காட்டு மரங்களும், காட்டுக் கொடிகளும் அப்படியே ஸ்வாகா!

வெட்ட வெட்ட வளரும் மரம்தான் வளர்கிறது. அதனால்தான் கருவ மரம் வளர்கிறது. வேறு எந்த எழவு மரமும் வளர மாட்டேன்கிறது பாவி மனிதர்கள் வாழும் சனப்பகுதிகளில். சனப் பகுதிகள் வந்தால் வனப் பகுதிகள் போய் விடும் அல்லவா!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...