10 Nov 2018

ஆண் - பெண் வலிமை ரகசியம்


ஆண் - பெண் வலிமை ரகசியம்
ஆண்களை வலிமை மிகுந்தவர்களாகவும், பெண்களை வலிமை குறைந்தவர்களாகவும் சித்தரிக்கிறோம் என்றார் எஸ்.கே.
யாரை வலிமை குறைந்தவர்களாக கருத வைக்கிறோமோ அவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திப்பார்கள். பெண்கள் இப்படித்தான் தங்களது பாதுகாப்பைக் குறித்து அதிகம் சிந்திக்க வைக்கப்பட்டார்கள் என்றார் எம்.கே.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வலிமை என்பது உடலைக் கடந்து அறிவைக் கையாளும் விதத்திற்கு மாற்றம் கொள்வதால் பெண்களை Weaker  Sex என்று சொல்லும் கருத்தாக்கம் மாற்றம் பெறத் துவங்கியிருக்கிறது என்றார் எஸ்.கே.
இப்போதுதான் பெண்கள் தங்கள் பாதுகாப்பைக் கடந்து தங்களைக் குறித்து சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள். இந்த மாற்றம்தான் அறிவில் யாரும் வலிமை குறைந்தவர்களோ, வலிமை மிகுந்தவர்களோ இல்லை என்று கருத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமையும் என்றார் எம்.கே.
தொடர்ந்து எஸ்.கே.வும், எம்.கே.வும் தங்களின் பெயர்கள் மீ டூவில் இடம் பெறக் கூடாது பிரார்த்திக்கத் தொடங்க ஆரம்பித்தார்கள்.
தங்களைப் பார்த்து யாரும் யூ டூ என்று யாரும் கேட்டு விடக் கூடாதே என்ற அச்சம் அவர்கள் மனதில் படரத் தொடங்கியது.
*****
            வாக்குவாதம் இருவருக்கு இடையே என்றால் இருவர் மீதும் தவறு இருக்கிறது. அமைதியாக செல்ல வேண்டிய கடமை அதில் ஒருவருக்கேனும் இருக்கிறது. இப்படியெல்லாம் சுத்தி வளைத்து பேசுவது கொடுமையாகவும் இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...