9 Oct 2018

அடிப்படைத் தேவை

அடிப்படைத் தேவை
பசித்தால் சாப்பாடு
உடுத்திக் கொள்ள ஒட்டுத் துணி
உறக்கம் வந்தால் சுருண்டு கொள்ள ஓர் இடம்
துரத்த முடியாத தேவைகளைச் சுமந்து திரிகிறேன்
கொஞ்சம் பணம் இருந்தால் தேவலாம்
பணமே அடிப்படைத் தேவை
கிரடிட் கார்டு சில இடங்களில் செல்லாது
முதுகால் தலையைச் சுமக்க முடியாத கிழவி
கல்தோசை சுட்டுக் கொண்டிருக்கிறாள்
மிகு ருசியாக இருக்கும்
பசியென்றால் காசின்றியும் தருவாள்
அப்படிச் சாப்பிடத் தோணாது
பணமே அடிப்படைத் தேவை என்றால்
த்தூ எனக் காறித் துப்பி விடுவாள்
அன்பே அடிப்படைத் தேவை என்பாள் அக்கிழவி
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...