உங்களைத் திருத்திக்
கொள்ள வேண்டுமானால், முதலில் எல்லாவற்றிற்கும் யோசனை சொல்வதை நிறுத்த வேண்டும்.
அதற்கு முன் முதலில் நான் அதைச் செய்ய வேண்டும்.
*****
உழுதவன் கணக்குப்
பார்த்து உழாமல் இருந்து விட்டால் பசியோடு இருப்பவர்களின் நிலை என்னாவது? சில இடங்களில்
கணக்கு எல்லாம் கணக்குக்குக் கூட உதவாது.
*****
உடனடியாக செய்ய
வேண்டும் என்று அவசியமில்லை. மெதுவாகவேனும் செய்து விடுங்கள். அதன்பின் உடனடியாக செய்ய
வேண்டியதன் அவசியத்தை யாரும் உங்களுக்கு உணர்த்தத் தேவையில்லை. நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.
*****
காரியங்கள்
பலவும் ஆளைப் பொருத்து கால தாமதத்தைக் கடனாகக் கேட்பவை.
*****
பேசாமல் இருப்பது
சக்தி. ஆளாளுக்குக் கண்டபடி அர்த்தம் செய்து கொள்வார்கள்.
*****
No comments:
Post a Comment