10 Oct 2018

பின் பக்க ஓட்டையின் பிரதானச் சிரிப்பு

பின் பக்க ஓட்டையின் பிரதானச் சிரிப்பு
ஆட்சியாளர்கள் சொன்னால்
திருக்குறளைக் கம்பர் இயற்றுவார்
கம்பராமாயணத்தைச் சம்பந்தர் பாடுவார்
காலம் கெட்டுக் கிடக்கிறது
கழுத்தைத் திருகிக் கண்ணகி வீசப்படலாம்
விழுந்தது கோவலன் தலையோடு இருக்கட்டும்
அரசியல் பிழைத்தோர்க்கு ஏரியின் மேலே
அங்கங்கே ஆறு அபார்ட்மென்ட்கள் இருக்கும்
ஊழ்வினை உருத்து வந்து அப்பாவிகளை
ஓகிப் புயலாய் அடிக்கும்
உரைசால் பத்தினி மேல் பிராத்தல் கேஸ் இருக்கும்
அறம் பாடுவேன் எனாதே
குமுட்டியில் குத்துவார்கள்
ஓட்டுக்கு ஆறாயிரம் வாங்கும் எட்டப்பன்கள்
ஊருக்குள் ஆயிரம்
ரெய்டில் சிக்கும்
கண்டெய்னரில் போகும்
உல்லாச விடுதியில் ஓய்வெடுக்கும்
புற்றீசல் போல புறப்பட்டு வருவது எது எனச் சொல்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...