ஏதோ ஒன்றில்
ஈடுபடும் உழைப்புதான் கவலையிலிருந்து காப்பாற்றுகிறது. இப்படித்தான் உழைப்பு பழக்கதோஷமாகி
விட்டது. அந்த உழைப்பு என்னவென்று சொன்னால்... வீட்டில் திட்டுவார்கள். விட்டு விடலாம்.
பாஸ் ப்ளீஸ்! சார் ப்ளீஸ்!விட்டு விடலாம்!
*****
அதிகம் பேசாமல்
இருப்பதன் மூலம் ஆபத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. பேசாமலே இருப்பதன் மூலம் ஆபத்தே
இல்லாமல் இருக்க முடிகிறது. ஊமை என்று சொல்லி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
*****
வாங்காமல் இருப்பதற்கு தடை போடுவார்கள்,
தயாரிப்பதற்கு யார் தடை போடுவார்கள்? பாக்கு தயாரிப்பதற்கும் சிகரெட் தயாரிப்பதற்கும்தான்
எத்தனை கம்பெனிகள்? ஏக், தோத், தீன்,...
*****
யாரை எதிர்பார்க்கிறோமோ
அவர் தலைவராக மாட்டார். அரசியலில்தான் இப்படியெல்லாம் நடக்கும்.
*****
ரசிச்சு ரசிக்சு
கவிதை எழுத மழையில் என்ன இருக்கிறது? சிறு மண்ணையும் காங்கிரீட் ஆக்கியவர்களுக்காக
எதற்கு மழை பெய்ய வேண்டும்? மழை கோட்டும், குடையும் வாங்கி வைத்துள்ளவர்கள் எதற்காக
மழையை ரசிக்க வேண்டும்? ஏதோ மழை பெய்கிறது. பெய்து விட்டுப் போகட்டும். மழையில் சில
செளகரியங்கள் இருக்கின்றன. சோப்புப் போட்டு குளிக்க வேண்டியதில்லை. அப்படியே குளிக்கலாம்.
துவைக்காமல் சட்டையை அவிழ்த்துக் காயப் போட்டு விடலாம். பத்து நாளுக்கு பைப்பில் தண்ணீர்
வராவிட்டாலும் பரவாயில்லை. வெள்ளம் வராமல் இருக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment