21 Oct 2018

கஷ்டத்தை வாசிக்கும் வசீகரம்


என் சொல்லி வாழ்த்துவனே!
            சிலர் உயிரோடு இருக்கும் போதும் பிரச்சனையாக இருக்கிறது. செத்துத் தொலைத்தாலும் பிரச்சனையாக இருக்கிறது. அவர்களின் அமைப்பு அப்படி இருக்கிறது.
            எந்நிலையில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் பிரச்சனை தருவதே ஒரு சிலரின் அமைப்பு, செத்தாலும் கூட.
            செத்தப் பிறகும் பிரச்சனை தருவதற்கு விஷேசமான அமைப்பு இருக்க வேண்டும். அது அவர்களுக்கு இருக்கிறது. செத்த பின்னும் காரியம் ஆற்ற மிகப் பெரிய சக்தி வேண்டும்.
            அந்த மகான்களை என் சொல்லி வாழ்த்துவனே!
*****
கஷ்டத்தை வாசிக்கும் வசீகரம்
            நான் ஆசைப்படுவதை எழுத முடியவில்லை. ஆசைப்படுவதெல்லாம் ரகசியங்கள். ரகசியங்களை வெளியில் சொல்ல முடியுமா சொல்லுங்கள். ஆனால் அதனால் நேர்ந்ததை எழுத முடிகிறது. அதையே எழுதுகிறேன்.
            பலரைப் போலவும் பத்திரிகைகளில் பிரசுரமாகும் வகையிலான எழுத்துகளையும் எழுத விரும்புகிறேன். இப்போதெல்லாம் பத்திரிகைகளை யார் பாஸ் படிக்கிறார்கள்? வாட்ஸ்அப்பில் வருபவைகளில் படிக்காமல் போடப் படுபவைகள் பத்திரிகைகளாகத்தான் இருக்கின்றன. ஏதோ அந்தப் பத்திரிகைகளுக்கு எழுதும் படைப்பாளர்கள் மட்டும் படிப்பார்கள் போலும்.
            எழுத்துகளால் நிலைபெற்றவர்கள் எத்தனை பேர்? யூடியூப்பினால் நிலைபெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தைப் பொருத்த வரையில் அது வாழும் காலத்தில் எந்தச் சிறப்பையும் பெற்றதில்லை. இதனால் கூட எழுத்தாளர்கள் அருகி வரலாம் அல்லது பெருகி வரலாம். அவர்களின் எழுத்து அவர்கள் வாழும் காலத்தில் எந்தச் சிறப்பையும் பெற்றதில்லை. அதனால் அப்படியே இருக்கட்டும் என் எழுத்து. எதை எழுத வருகிறதோ அதுவே என் எழுத்து. உங்களுக்குப் படிக்க சிரமமாக இருக்குமே என்று பல நேரங்களில் நினைத்துக் கொள்வதுண்டு. நினைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது? கஷ்டமான இந்த எழுத்தைப் படிக்கும் ஒரு வசீகரத்துக்கு ஆட்பட்டு விட்டீர்கள் நீங்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...