8 Oct 2018

உருட்டி மிரட்டும் காலக் கிழவன்

உருட்டி மிரட்டும் காலக் கிழவன்
பணபட்டுவாடா இல்லாமல் முடிந்து விடுமா என
கண்ணெதிரே பொரியெனப் பொரிந்து
பிரமை தட்டுகிறது
வாக்களிக்கும் இயந்திரம்
மூன்றாவது முறையாக கனவில் வந்து கலைகிறது
சின்னங்கள் மங்கலாகத் தோன்றி மறைகின்றன
அபார்ஷன் ஆன ரத்தக் கவிச்சை வாடை
எதேச்சையாக கடந்து போகிறது
ரூபாய் நோட்டுகள் பறக்கும்
வழக்கமான கிளிஷே வழக்கம் போல்
திகிலூட்டுகிறது - ஏன் திகட்ட மாட்டேன்கிறது
என்பது புரியாமல் மென்று கொண்டிருக்கிறது மனம்
நல்ல விலைக்குப் பேரம் பேசி விற்பதற்குத்தானோ
பேரம் பேச விடாமல் வாங்கிக் கொள்வதற்குத்தானோ
எதற்கென்று புரியாமல் கையிலிருக்கும்
கண் மை டப்பாவை வைத்து
ஆள்காட்டி விரலை நீட்டச் சொல்லி
முகத்தில் பூசி விடுவது போல
உருட்டி மிரட்டுகிறான் காலக் கிழவன்
காப்பாற்றுங்கள் என்று கத்துபவனின்
உடம்பு வியர்க்கிறது
ஓட நினைப்பவனின் கால்கள் ஓட மறுக்கின்றன
கெட்ட கனா கண்டியா என்று கேட்க யார் இருக்கிறார்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...