7 Oct 2018

கால் கட் பண்ணிட்டாம்லே!


உள்ளே இழுக்கும் வரை வழிந்து வழிந்து பேசுகிறார்கள். அதற்கு அப்புறம் கந்துவட்டிக்காரர் ரேஞ்சுக்கு டெரர் எபெக்ட் கொடுக்கிறார்கள்.
*****
அட கருமமே! கார் லோன் வேணுமான்னு கால் பண்ணிக் கேட்குறாம்லே! நாம விவசாய லோன் வேணும்னு கேட்டதும் கால் கட் பண்ணிட்டாம்லே!
*****
இயந்திரங்கள் மனிதர்களை ஆளும் என்பதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இயந்திரங்களுக்கு என்ன பசி இருக்கிறதா? ஆசை இருக்கிறதா? அல்லது ஈகோதான் இருக்கிறதா? இயந்திரங்கள் மூலமாக மனிதர்கள் வேண்டுமானால் மனிதர்களை ஆளலாம். அப்படித்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஓட்டு மெஷின் ஒரு சிம்பிள் குறியீடு. மற்றபடி எந்திரன் படம் எல்லாம் செம காமெடி.
*****
தலைவராக இருந்தால் தப்புத் தப்பாகப் பேசலாம். வேறு எதற்காக தலைவராக ஆசைப்படப் போகிறேன் சொல்லுங்கள்?
*****
கொஞ்சம் காலம் கடந்து பார்த்தால் சீரியஸ் எல்லாம் செம காமெடியாகி விடுகிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...