23 Oct 2018

சின்ன அரிப்புக்குக் கொள்ளிக்கட்டை


வாட்ஸ் அப் மேசேஜ் அனுப்பினால் பால்காரர், தண்ணீர்காரர் வந்து விடுகிறார். நெருங்கிய நண்பர்கள் பிசியாக இருப்பதாக மறு மேசேஜ் போடுகிறார்கள்.
*****
நிர்வாகங்கள் முன்னின்று டாஸ்மாக் தண்ணியை வழங்குவதில் விடாப்பிடியாக முன்னோக்கிச் செல்கின்றன. நல்ல தண்ணியை வழங்குவதில்தான் பின்தங்கி விடுகின்றன.
*****
டாக்டர் வாட்ஸ்அப்பில் அப்பாய்ன்மெண்ட் கொடுக்கிறார். அவர் பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருப்பாரா? வாட்ஸ்அப்பையே பார்த்துக் கொண்டு இருப்பாரா?
*****
கோபம் கொள்ளுதல் என்பது சின்ன அரிப்புக்குக் கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்து கொள்வது போன்றது. அரிப்பு போய் விடும். எரிச்சல் மிகுந்து விடும்.
*****
நாம் எவரையும் பழி வாங்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது கடைசியில் நம்மையே பழி வாங்குவதில் வந்து முடியும். (யார் அந்த நாம் மற்றும் நம் என்று கேட்காதீர்கள். அது தெரியாமல்தான் அப்படி எழுதியிருக்கிறேன்)
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...