23 Oct 2018

ப்ளாஷ் நியூஸ் பீதிகளில் ஏற்படும் பேதிகள்


முயல் எனக்குப் பிடித்த ஜீவராசி
ஒவ்வொரு படைப்பாளரும் முயன்று கொண்டிருக்கும் போது நீ ஏன் சும்மா இருக்கிறாய்? படைப்பைச் செய். புகழையோ, ஆதாயத்தையோ எதிர்பார்க்காதே. எது கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும். அல்லது கிடைக்காமலும் போகும். ஆம், கிடைக்காமலும் போகும். அதற்காகவேனும் முயல். முயல் எனக்குப் பிடித்த ஜீவராசி. ஆமையைத் தோற்கடித்தது அல்லவா!
*****
ப்ளாஷ் நியூஸ் பீதிகளில் ஏற்படும் பேதிகள்
ஒரு புரிதல் தேவைபடுகிறது. நிச்சயம் அது பற்றிப் புரிந்து கொள்ள ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைபடுகிறார். அந்தத் தேவையைத்தான் வசவுகள் நிறைவேற்றுகின்றன. வசதி இருந்தால் அடியாள்கள் வைத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?
பேசுவதுதான் நிறைவேற்றுகிறது. பேசுவது எல்லாம் அதற்காகத்தான். அவ்வாறு பேசுவதில் ஒன்றிரண்டு பத்திரிகைகளின் வணிகத்துக்கு, சேனல்களின் பரபரப்புக்கு உகந்ததாக இருக்கலாம். இப்போது விசயத்தைக் கச்சிதமாக கவ்விக் கொண்டு இருப்பீர்களே. அவைகள் பிரசுரம் ஆகின்றன, ஒளிபரப்பு ஆகின்றன. பத்திரிகைகளில், சேனல்களில் தொடர்ந்து அது... அதுதான் அது முடிவதில்லை என்றால் அதற்காகப் பேசுவதில்லை என்று முடிவெடுத்துப் பேசிப் பார்க்க வேண்டும். அப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று அதுவும் பிரசுரமாகும், ஒளிபரப்பாகும். 
எதையும் சாதாரணமானது என்று சிலவற்றை  ஒதுக்கி விடுவதுண்டு. அப்படி எதையும் ஒதுக்கத் தேவையில்லை. எதுவும் சாதாரணமானதும் இல்லை, அசாதாரணமானதும் இல்லை. ஒரு சாதாரணம் அசாதாரணமாகக் கூட கரு கொள்ளலாம்.
ப்ளாஷ் நியூஸ் பீதிகளில் ஏற்படும் பேதிகளில் இதை உணரலாம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...