5 Oct 2018

ஆத்தங்கரை மேல் தண்ணீர் பந்தல்


இன்னும், இன்னும், இன்னும்,... என்று காற்புள்ளி வைக்க மனிதருக்குத் தெரியும். போதும் என்று முற்றுப்புள்ளி வைக்க மரணத்துக்குத் தெரியும்.
*****
எளிமையான வாழ்க்கை புரிய எல்லாம் மறக்க வேண்டும். எல்லாம் மறப்பது அவ்வளவு எளிதில்லை. அவ்வளவு ஞாபகம் மனிதருக்கு.
*****
ஊற்று தோண்டிக் குடித்த ஆத்தங்கரை மேல் தண்ணீர் பந்தல்.
*****
இப்போதெல்லாம் டூ வீலரை யார் சார் திருடுறாங்க?
நாடு அவ்வளவா திருந்திடுச்சு!
பெட்ரோலை ஆட்டையப் போட்டுறாங்கன்னு சொல்ல வந்தேன் சார்!
*****
நல்ல பிள்ளைன்னு பேர் வாங்க நாளாகும்
அதைத்தானே நானும் சொல்றேன்
நீங்கதான் அவசரப்படுகிறீர்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...