6 Oct 2018

உதிரும் பிம்பம்


உதிரும் பிம்பம்
கண்ணாடிக்கு எல்லாம் தெரியும்
அலங்கார முகமும்
அலங்காரமற்ற முகமும்
கண்ணாடி எல்லாம் காட்டும்
நிர்வாணம் உட்பட
கண்ணாடி பார்ப்பது
எளிது போல் தோற்றம் தரும் கடினம்
கலையப் போகும் பிம்பத்தை
கலையும் முன் காட்டுகிறது கண்ணாடி
கண்ணாடி பார்த்து நாளாயிற்று என்று
சொல்பவனைப் பார்த்தால் கும்பிடு போடு
பிம்பத்தைத் தொலைத்தவர்களைப் பார்ப்பது அரிது
இருப்பதைத்தானே காட்டுகிறது கண்ணாடி
இல்லாததைப் பார்ப்பதைப் போல் ஏன் பார்க்கிறாய்?
ரசம் போனக் கண்ணாடியில்
தேய்த்தபடி கிடக்கிறது உன் பிம்பம்
நீரலையில் நெளியும் பிம்பம் போலாகட்டும்
கல் விட்டு எறி குறி பார்த்து
பெரிய உருவத்தைச் சிறியதாக்கும் கண்ணாடியில்
உடையும் ஒவ்வொரு சில்லிலும்
உதிர்ந்து கிடக்கட்டும் ஒரு பிம்பம்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...