5 Oct 2018

மாற்றிக் கொள்ளும் அறை


மாற்றிக் கொள்ளும் அறை
இருவர் பகிர்ந்து கொள்ளும் அறை
சரிபாதி தனிமையால் நிரம்பிக் கிடக்கிறது
மறுபாதி அரட்டையால் அமைதியிழந்து கிடக்கிறது
காரும் சிகரெட் நெடியில்
அறையின் தனிமை இன்னும் ஆழமாகிறது
ஏதேதோ எண்ணிப் பார்த்து
மின்விசிறியில் முட்டைப் போல் தொங்கும்
கயிற்றையும் கற்பனையில் பார்க்கிறது
பின்னொரு கட்டத்தில் தானாக வெளியேறும் தனிமை
அதற்குப் பின் அறைக்குள் திரும்பாமலிருக்க வேண்டும்
என்று நினைப்பதற்குள்
வாடகைக்காரர்களை மாற்றிக் கொள்கிறது அறை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...