11 Oct 2018

டாஸ்மாக் முக்கியமான லேண்ட் மார்க்


மனிதர்கள் பயத்திற்கு மரியாதை தருகிறார்கள் அல்லது பணத்திற்கு மரியாதை தருகிறார்கள். ரெளடிகள் பயத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அரசியல்வாதிகள் பணத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
*****
நாகரிக மனிதர்கள் நிறைய வசதிகளை எடுத்துக் கொண்டார்கள். சொகுசுகளைச் சேர்த்துக் கொண்டார்கள். ஆடம்பரங்களை அரவணைத்துக் கொண்டார்கள். அவைகளோடு இலவச இணைப்பாக நோய்களை ஏற்றுக் கொண்டார்கள். சாப்பிட்ட பின் சுகர் மாத்திரை போடவில்லை என்றால் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
*****
ட்ரஸ் சொல்வதில் இப்போதெல்லாம் டாஸ்மாக் முக்கியமான லேண்ட் மார்க். அதாவது டாஸ்மாக்லேர்ந்து நேரா வந்து ரைட் கட் பண்ணீங்கன்னா...
*****
முதியோர்கள் வாழும் வீட்டில் ரிமோட்டுக்கு அதிக வேலை இருப்பதில்லை. ஆல்வேஸ் பக்தி மணம் கமழும் சீரியல்கள் மற்றும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண...
*****
வானைப் பார்த்தால் கடலைப் பார்ப்பது போலிருக்கும். கடலைப் பார்த்தால் வானத்தைப் பார்ப்பது போலிருக்கும். இருவரும் தூரத்து நண்பர்கள். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதில்லை.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...