12 Oct 2018

விதியுடைத்து வெட்ட வரும் கவிதைகள்


விதியுடைத்து வெட்ட வரும் கவிதைகள்
எந்த வரியைக் எந்த வரியோடு கோர்த்து
எப்படிக் கொண்டாலும்
பொருள் வரும்
பத்தாவது வரியை முதல் வரியோடு
கோர்த்தாலும் அப்படியே
தானாக எழுதிக் கொண்ட கவிதைகள்
பொருள் வெளியில்
சாதிப் பார்க்காது புணரும்
புதுசுப் புதுசாய்ப் பெற்றுத் தள்ளும்
சோடைகள் இருக்காது
சாதிக் கட்டுமானம் கவிதைகளுக்கில்லை
கெளரவக் கொலை செய்ய புறப்படாது இருமின்
பழி வாங்கிக் கொல்லப் புறப்படும் கவிதைகள்
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...