11 Oct 2018

காதுக்குப் பிடிபடா பேச்சின் நாற்றம்


காதுக்குப் பிடிபடா பேச்சின் நாற்றம்
உடைந்த வாளி
அழுக்கேறிய மக்கு
தூய்மையைப் பற்றிப் பேச வேண்டும்
இன்று நடைபெறும் கருத்தரங்கிலும்
தூய்மையற்ற நாவுக்கு வேறு வழியேது
பேச வேண்டும்
பேசத்தான் வேண்டும்
பேச்சின் நாற்றம் காதுக்குப் பிடிபடுமா?
*****
வருகிறது போகிறது கடலலை
வருகிறது போகிறது
கடலலை அப்படித்தான்
நீ பார்த்தாலும் அப்படித்தான்
பார்க்காவிட்டாலும் அப்படித்தான்
அது குறித்து ஏதேனும் கருதினாலும் அப்படித்தான்
கருதாவிட்டாலும் அப்படித்தான்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...