22 Oct 2018

தமிழ்நாட்டில் மனஉளைச்சல்கள் கம்மி


சகட்டு மேனிக்கு எழுதும் சந்தோசம் எல்லாம் ப்ளாக் தந்த வரம்.
*****
தமிழ்நாட்டில் மனஉளைச்சல்கள் கம்மி. இவ்வளவு டாஸ்மாக்குகள் இருப்பதால் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது. அவர்கள் இதனால் எந்தவித மன உளைச்சல்கள் இல்லாமல் போதையில் வெட்டுபட்டோ, அடிபட்டோ செத்து விடுகிறார்கள்.
*****
முன்னாள் காதலியை\ காதலிகளை எப்போதோ ரயில் நிலையங்களில் பார்ப்பதும் மெளனம் ஆவதும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லையே என விக்கித்துப் போவதும் அபூர்வமாகி இப்போது தினம் தினம் வாட்ஸ்அப்பிலே ஹாய் சொல்கிறார்கள்.
*****
பார்வேர்ட் மேசேஸ்களை அனுப்பிக் கொண்டே இருப்பவர்கள் நமக்கான நலம் விரும்பிகளாகக் கருதப்படுகிறார்கள்.
*****
சில வாட்ஸ்அப் குரூப்களில் பார்வேர்டு மேசேஜ்களைப் போடக் கூடாது என்கிறார்கள். அந்த குரூப்பில் மட்டும் பார்வேர்டு மேசேஜ் செய்யாமல் அந்தக் குறிப்பிலிருந்து எடுக்கும் எல்லா மேசேஜ்களையும் பார்வேர்டு செய்து கொண்டு இருக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...