4 Oct 2018

ஞாபகக் கைதி


ஞாபகக் கைதி நீ!
*****
முதல் முறை சுடுவது நெருப்பு. அதற்கு அப்புறம் சுடுவதெல்லாம் ஞாபகங்கள். அதை நீ மனசு என்பாய். நான் அதை வெறும் ஞாபகம் என்பேன்.
*****
ஞானம் வேண்டும் என்பவர்கள் ஞானம் பெற முடியாது. அது வேண்டாம் என்பவர்களுக்கே சித்திக்கிறது. அதற்காக ஞானம் வேண்டாம் என்பவர்களுக்கெல்லாம் அது சித்தித்து விடாது.
*****
அமைதி என்ற வார்த்தை உச்சரிக்கப்படுவது எதைச் சொல்கிறது தெரியுமா? அமைதியில்லை என்பதைத்தான். அமைதியான அறையில் சைலன்ஸ் ப்ளீஸ் என்று யார் கத்தப் போகிறார்கள்!
*****
வசதி வந்தால் எல்லா கஷ்டமும் தீர்ந்து விடும் என்று நம்பியவர்களை, வசதி வந்த பின் மருத்துவமனைகளில் சந்திக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...