10 Oct 2018

லட்சியங்களை அனாதைகளாக்கி விடக் கூடாது


எவ்வளவு தடைகள் வந்தாலும் லட்சியங்களை விட்டு விடக் கூடாது. பாவம்! லட்சியங்களை அனாதைகளாக்கி விடக் கூடாது!
*****
கவிதை வெறுத்து விட்டது என்ற போதுதான் புரிந்து கொண்டேன், மன கிறுக்கின் காலம் முடிந்து விட்டது என்பதை.
*****
நடக்க நடக்க பாதை நீள்கிறது அல்லது உண்டாகிறது.
*****
நீங்கள் ரசித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தனி தைரியம் வேண்டும். குறிப்பாக புத்தகங்களில் ரசிப்பதை. அதைப் பகிரப் பகிர நண்பர்கள் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். அதற்கு அப்பால் புத்தகங்கள் மட்டுமே நண்பர்களாக இருக்கின்றன.
*****
தோற்று இருக்கலாம். அந்த அனுபவம் பொக்கிஷம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...