22 Oct 2018

வாசிப்பவர் வியாதியஸ்தராகி விடுகிறார்!


வாசிப்பவர் வியாதியஸ்தராகி விடுகிறார்!
செய்த தவறுகள் சில உண்டு.
திரு. ........... அவர்களிடம் கலந்து ஆலோசித்து லேபிள் தயார் செய்தது. லேபிள் என்பது ஒரு மறைசொல்.
அவரிடம் வீட்டிலும் குறைவாகத்தான் சாப்பிடுவீர்கள் போலிருக்கிறது எனக் கேட்டது. ஓட்டலில் என்றால் புல் கட்டு கட்டுகிறார். பில் என்னுடையது அல்லவா!
இவைகளெல்லாம் தேவையற்ற செயல்பாடுகள் மற்றும் உரையாடல்கள். ஒருவர் ஒரு விசயத்தை எப்படி எடுத்துக் கொள்வார் என தெரியாத போது அவ்விசயங்களை முயற்சித்துப் பார்ப்பதோ, உரையாடலில் பயன்படுத்துவதோ ஆபத்தானது. அந்த ஆபத்துதான் நாக்குக்குப் பிடித்திருக்கும் போலிருக்கிறது. அதையே தினமும் செயல்படுத்திப் பார்க்கிறது. தர்ம அடிகள் முதுகுக்கு.
எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டியிருக்கிறது. அது அதிகார வரம்பில் இருப்பவைகளிடம் செய்து பார்க்கும் போது பிரச்சனையில்லை. இல்லையென்றால் போதுமான லாஞ்சத்தைக் (லஞ்சம் என்பதுதான் சரியானது எனாதீர்கள். லாஞ்சம் என்பதும் சரியானதே) கொடுத்து அதிகார வரம்பிற்குள் வருவது போல ஓர் உதார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. செய்கின்ற ஒன்றுக்கு எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் வரலாம் என்கிற நிலையில் இன்னொருவர் கட்டுபாட்டில் இருக்கும் ஒன்றில் எதையும் செய்ய வேண்டியதில்லைதான். நிச்சயமாக அவர்களுக்குச் செய்யப்படும் நல்லதும் கெடுதல் போலத்தான் தென்படும். கெடுதல் நல்லது போல படுமா எனத் தெரியாது.
பேச்சின் மூலம் படைப்பைப் பிரசவிப்பதாக ஒரு மமதை இருந்தது, இருக்கிறது, வருங்காலத்தில் இருக்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை. எதிர்மறை உணர்வுகளை அதன் வழியாகத்தான் வழிய விடுகிறான் எழுத்தாளர் என்பவர். எழுத்து ஒரு குணப்படுத்தல். எழுத்தாளர் குணமாகி விடுகிறார். படிப்பவர் வியாதியஸ்தராகி விடுகிறார். காலகொடுமை இது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...