16 Oct 2018

பாடகிகளின் பாட்டு


பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியைக் கம்பெனி ஆட்சி என்கிறார்கள். நன்றாக இருக்கிறது நியாயம்? இப்போதும் கம்பெனி ஆட்சிதான். நீங்கள் சற்று டீசன்டாக கார்ப்பரேட் ஆட்சி என்பீர்கள்.
*****
வரும் கடன் கொடுக்க மாட்டார்கள். வாராக் கடன் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள். உங்களுக்குப் புரிகிறதா? புரிந்தால் அமைதியாக இருங்கள்.
*****
ரசியல் வெற்றிடம்...
ப்ளாட் போட்டு வீடு கட்டுங்க(...)
*****
மகா கவிஞர் பாரதியாருக்கு குயில் பாட்டு. இன்றைய கவிஞர்களுக்குப் பாடகிகளின் பாட்டு.
*****
நான் ஒரு விவசாயிங்க என்றேன். தண்ணி கிடைக்ககுதுங்களா என்றார் கேட்டுக் கொண்டிருந்தவர். அதெல்லாம் படு ஜோரா கிடைக்குதுங்க என்றேன். அவர் எந்தத் தண்ணியைக் கேட்டார், நான் எந்தத் தண்ணி கிடைக்கிறது என்று சொன்னேன் என்று கண்டுபிடிப்பவர்கள் சமூக விஞ்ஞானிகள்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...